ஸ்ரீசாரதாகல்வியியல்கல்லூரி(தன்னாட்சி), சேலம் – 16
மாதிரிபாடத்திட்டம்– 3
பயிற்சிஆசிரியர்பெயர்டி.கவிதா பாடம் – தமிழ் – இலக்கணம் நாள்– 14.09.2017
பள்ளி - அலகு – பெயர்ச்சொற்கள் நேரம் – 45 மணித்துளிகள்
வகுப்பு – ஏழாம் வகுப்பு துணைஅலகு – அறுவகை பெயர்கள்
மாணவர்எண்ணிக்கை –
கற்பித்தலின்நோக்கங்கள் – மாணவர்
அறிவுபெறுதல் – அறுவகை பெயர்கள் பற்றி
கேட்டுப் பொருள் உணரும் ஆற்றலை வளர்த்தல் –
பெயர் சொற்களைப் பற்றி
படித்துப் பொருள் உணரும் ஆற்றலை வளர்த்தல் – பெயர்சொற்களுக்கான எடுத்துக்காட்டுகளைப்பற்றி
திறன் வளர்த்தல் – கேட்டல், எழுதுதல், பகுத்தராய்தல் முதலியன
நோக்கக்கூறுகள் – மாணவர்
நினைவுகூர்தல் – பெயர்சொற்கள்
மீட்டறிதல் – அறுவகை பெயர்கள் பற்றி
வகைப்படுத்துதல் - பொருட்பெயர்களின் வகைகளைப் பற்றி
உற்றுநோக்கல் - நாற்காலி, மண், நீர், செடி,எழுதிய மின்னட்டை
வறையறை காணல் - இடப்பெயர் எடுத்துக்காட்டுகள்
வறையறை காணல் - இடப்பெயர் எடுத்துக்காட்டுகள்
எடுத்துக்காட்டுத் தருதல் – காலப்பெயர்கள் பற்றி
விளக்குதல் - காலப்பெயர்கள்
மீட்டறிதல் - சினைப்பெயர்கள் பற்றி
எடுத்துக்காட்டுத் தருதல் – சினைப்பெயர்கள்
பகுத்தராய்தல் - பல்வகை பெயர்சொற்கள்
தொகுத்துரைத்தல் - அறுவகை சொற்கள் பற்றி
துணைக்கருவிகள்
1) பெயர்சொற்கள் அடங்கிய மாதிரி
2) சொற்கள் அடங்கிய மின்னட்டை
நோக்கக்கூறுகள்
|
பாடப்பொருள்
|
கற்றல்அனுபவம்
|
மதிப்பீடு
|
மாணவர்
நினைவுகூர்தல் |
கல், மண், பழம், கண், இலை, மேஜை, நாற்காலி போன்றன.
பண்பு, பொருள், இடம், காலம், சினை, தொடரில் என்பன |
பெயர்சொற்களை குறிப்பிடுக
அறுவகை பெயர்கள்
யாவை?
|
|
மீட்டறிதல்
|
ஒரு பொருளைக் குறிக்கும் பெயர் பொருட்பெயர் ஆகும்.
|
பொருட்பெயர்என்றால் என்ன?
|
|
வகைப்படுத்துதல்
|
உயிருள்ள பொருட்கள் உயிரற்ற பொருட்கள் என இருவகைப்படும். உயிருள்ளபொருட்கள் குமரன், மலர்கொடி, தென்னை. உயிரற்ற பொருட்கள் நாற்காலி, தட்டு, மண், நீர்
|
பொருட்பெயர் எத்தனை வகைப்படும்?
அவை யாவை? |
|
உற்றுநோக்கல்
|
நாற்காலி, மண், நீர், செடி எழுதிய மின்னட்டை
|
மின்னட்டையில் படித்தல்
|
|
வறையறைக் காணல்
|
ஒரு இடத்தைக் குறிக்கும் பெயர் இடப்பெயர் எனப்படும். ஊரின் பெயர்கள், மக்கள் வாழிடம் போன்றவை
|
இடப்பெயர்என்றால் என்ன?
|
|
எடுத்துக்காட்டுத்
தருதல்
|
கோவில், கடல், காடு, மலை, ஊர்
|
இடப்பெயருக்கு எடுத்துக்காட்டுத் தருக
|
மதுரை என்பது எதை குறிக்கும்
|
விளக்குதல்
|
காலத்தை குறிக்கும் பெயர் காலப்பெயர் ஆகும்
|
காலப்பெயர்என்றால் என்ன?
|
|
எடுத்துக்காட்டுத்
தருதல்
|
கண் இமைக்கும் நொடி பொழுது முதல் ஊழிக்காலம் வரை எல்லாமே காலப்பெயர்கள்
|
எவையெல்லாம் காலப்பெயர்கள்?
|
எத்தனை நொடி சேர்ந்தது நிமிடம் ஆகும்?
|
மீட்டறிதல்
|
சினை என்பது ஒன்றன் உறுப்பின் பெயரைக் குறிப்பது. மனித உறுப்புகள் விலங்குகள், தாவரப் பகுதிகள்
|
சினைப்பெயர் என்றால் என்ன?
|
|
எடுத்துக்காட்டுத்
தருதல்
|
தலை, மூக்கு, செவி, வாய், தண்டு, வேர்,இலை, கிளை முதலியன
|
சினைப்பெயருக்கு எடுத்துக்காட்டுத் தருக
|
பூ என்பது என்ன பெயர்?
|
பகுத்தராய்தல்
|
மூக்கு, எழுதுகோல், கரும்பலகை, மின்விசிறி, அந்திமல்லி, இரவு, உணவு, கடற்கரை
|
பெயர்சொற்களைப் பிரித்தறிக
|
பகல் என்பது எந்தவகை பெயர்?
|
தொகுத்துரைத்தல்
|
அறுவகை பெயர்ச்சொற்கள்
பற்றியும் அவற்றின் வகைகள் பற்றியும் அவை ஒவ்வொன்றிற்கும் எடுத்துக்காட்டுகளும் அறியப்படுகின்றன.
|
|
|
1.அறுவகை பெயர்கள் யாவை?
2. பொருட்பெயர் என்றால் என்ன?
3. காலப்பெயருக்கு எடுத்துக்காட்டுத் தருக.
4. சினைப்பெயர் என்றால் என்ன?
தொடர்பணி –
1. பண்புப்பெயரை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
2. தொழில்பெயரை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
3. அறுவகை பெயர்ச் சொற்கள் பற்றி தொகுத்துஎழுதுக?
4. உங்களை சுற்றியுள்ள அறுவகைப் பெயர்களை உற்றுநோக்கி வகைப்படுத்தி எழுதுக.
வழிகாட்டிஆசிரியர்கையொப்பம் பயிற்சிஆசிரியர்கையொப்பம்
மிகவும் எளிமையாகவும் நன்றாக புரியும்படி இருந்தது.நன்றி
ReplyDeleteசி.கமலி.
நன்றி அம்மா.....
ReplyDelete